Breaking Newsஆஸ்திரேலியர்களை அச்சுறுத்தும் Hi Mum மோசடி - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியர்களை அச்சுறுத்தும் Hi Mum மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

Hi Mum என அழைக்கப்படும் சைபர் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் இதுவரை சுமார் 02 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்கு தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பப்பட்டு அதில் அவர் தனது மூத்த பிள்ளை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் ஒரு புதிய கையடக்க தொலைபேசி வாங்கியிருப்பதாகவும், அதில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் ஆக்டிவேட் செய்ய அவருக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுவதாகவும் அறிவிப்பு வருகிறது.

தனது பிள்ளைகள் அனுப்பும் குறுந்தகவல் போன்று தாயார்களை குறி வைத்து குறுந்தகவல் அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனை நம்பும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பணம் கேட்பதாக நினைத்து பணத்தை பரிமாற்றம் செய்வதாகவும் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த மோசடியில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உங்களுக்கு இது போன்ற செய்தி வந்தால், சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்களை அழைத்து உடனடியாக உறுதிப்படுத்துமாறும், எந்த ஒன்லைன் பணப் பரிமாற்றத்திற்கும் செல்ல வேண்டாம் என்றும் ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொள்கிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...