ரஷ்ய – உக்ரைன் போரில் சக்தி வாய்ந்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட உளவு விமானங்கள்

0
105

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நிகழும் மிகப்பெரிய மோதலாக மாறியுள்ள ரஷ்ய – உக்ரைன் போரில் இருதரப்பினரும் பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரில் ரஷ்ய படைகள் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தின.

ஆனால் உக்ரைன், ரஷ்ய படைகளின் தாக்குதலை சமாளிக்க டிரோன்கள் எனப்படும் உளவு விமானங்களையே சக்தி வாய்ந்த ஆயுதமாக பயன்படுத்தி உள்ளன. இந்த போருக்கு முன்பாக உக்ரைனுக்கு துருக்கி வழங்கியிருந்த பேராக்டர் டிரோன்கள் நகருக்குள் நுழையும் ரஷ்யப்படைகளை துல்லியமாக தாக்க பெரிதும் உதவியாக இருக்கின்றன. எஸ் 300 எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலை தடுத்து நிறுத்த உக்ரைனுக்கு கைகொடுத்திருக்கிறது.

30 அடி வரை பறக்கக் கூடிய உளவு விமானங்களை ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகள் அருகே பறக்கச் செய்துள்ளன. ரஷ்ய படைகளை பின்வாங்க செய்வதற்காகவே இவ்வாறு உளவு விமானங்களை பயன்படுத்தி, அதில் உள்ள கேமிராக்களின் உதவியுடன் ரஷ்ய படைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, பதில் தாக்குதல் நடத்தி உள்ளது உக்ரைன். ஆனால் இதில் விலங்குகள் அதிகம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.