தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் முகக் கவசம் அணியும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு 1000 டொலர் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மீறல்களுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை அல்லது அபராதம் போன்றவற்றை வழங்க சட்ட ஏற்பாடு உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நான்கு வாரங்களில், பேருந்து, ரயில் மற்றும் டிராம் பயணிகளும் பொது போக்குவரத்தில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து தெரிவிக்கப்படும்.
ஆஸ்திரேலியாவில் பொது போக்குவரத்தில் முகக் கவசம் இன்னும் கட்டாயமாக உள்ளது.
ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை, நாட்டில் கிட்டத்தட்ட 10 மில்லியன் கோவிட் நோயாளிகள் மற்றும் 12,355 இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.