சீனாவில் மீண்டும் ஒரு புதிய வைரஸ் தொற்று… 35 பேருக்கு பாதிப்பு உறுதி

0
303

சீனாவில் கொரோனா போல் மீண்டும் லாங்யா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இது வரை 35 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.ஹெனிபவைரஸ் அல்லது லாங்யா என்று அழைக்கப்படும் இந்த வைரஸ், நிபா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ்யின் பாதிப்பு அதிகமாக இருந்தால் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் கொள்ளக்கூடிய திறன் உடையது என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு தற்போது சீனாவின் ஹெனான் மற்றும் ஷான்டாங் மாகாணங்களில் கண்டறியப்பட்டுள்ளது என்று சீனா ஊடகம் தெரிவித்துள்ளது.

லாங்யா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது. இது ஒருவரிடமிருந்து மற்றொவருக்கு தொற்றுகிறதா என்று சரியாகத் தெரியாத நிலையில் இதற்கான ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றனர். தொண்டையிலிருந்து எடுக்கும் எச்சில் மாதிரி மூலம் இந்த தொற்றைக் கண்டறியலாம். இதற்கு என்று தனியாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 71 ஷ்ரூஸ் என்று அழைக்கப்படும் சிறிய எலி போன்ற பாலூட்டி, நாய் மற்றும் ஆடுகளுக்கு லாங்யா வைரஸ் தொன்று கண்டறியப்பட்டுள்ளது. லாங்யா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் காய்ச்சல் உள்ள நிலையில், இரும்பல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல், தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த வைரஸ் முதலில் எங்கிருந்து தொடங்கியது என்று சாரியாகத் தெரியாத நிலையில் ஷ்ரூஸ் என்று அழைக்கப்படும் உயிரினத்திலிருந்து பரவிருக்கலாம் என்று எண்ணுகின்றனர். மேலும் லேசான அறிகுறிகளுடன் தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் இடையே நேரடி தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

Previous articleகொரோனாவை பரப்பிய தென் கொரியாவை சும்மா விடமாட்டோம்..வட கொரியா எச்சரிக்கை
Next articleசுதா கொங்கராவின் அடுத்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ்?