சுதா கொங்கராவின் அடுத்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ்?

0
168

இயக்குனர் சுதா கொங்கரா தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குகிறார். இதில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். தேசிய விருது வென்ற இயக்குனர் முன்னதாக ஒரு கேங்க்ஸ்டர் படத்திற்காக சூர்யாவுடன் மீண்டும் இணைவதாக தெரிவித்திருந்தார். தற்போது அதற்கு முன்னதாக, ஒரு பெண் மையப் படத்தை இயக்கவிருக்கிறாராம் சுதா கொங்கரா. அதில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அணுகப்பட்டுள்ளாராம்.

முன்னதாக ஏப்ரல் மாதம், சுதா கொங்கரா மற்றும் ஹோம்பலே பிலிம்ஸ் இணைந்து உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அதில் தான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அறிவிப்பு வெளியானபோது, ​​தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கையில், “சில உண்மைக் கதைகள் சொல்லத் தகுதியானவை, சரியானவையும் கூட. ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், இயக்குனர் சுதா கொங்கராவுடன் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. எங்களின் எல்லாப் படங்களையும் போலவே, இதுவும் உங்களை ஈர்க்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.