ஆஸ்திரேலிய கிரிக்கட் அணி வீரர்கள் இலங்கை மக்களுக்காக மிகப்பெரிய உதவிகளை செய்துள்ளனர்.
அணித்தலைவர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இலங்கை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது பரிசுத் தொகை ஒன்றை வென்றனர்.
இந்த நிலையில் அந்த தொகையை முழுமையாக இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர்களான பெட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோரின் தலைமையில் 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை அவர்கள் UNICEF ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் நன்கொடையாக வழங்கும் நிதியானது, தேவையிலுள்ள 1.7 மில்லியன் இலங்கைக் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், கல்வி மற்றும் மனநலச் சேவைகளை ஆதரிப்பதற்கான UNICEF இன் திட்டங்களுக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.