News இத்தாலி நோக்கி சென்ற நிலையில் கடலில் மூழ்கிய அகதிகள் படகு -...

இத்தாலி நோக்கி சென்ற நிலையில் கடலில் மூழ்கிய அகதிகள் படகு – 50 பேர் மாயம்

-

துருக்கியிலிருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகொன்று கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது.

ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவுப் பகுதியில் படகு மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

படகில் சுமார் 80 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டதாகவும், 50 பேரைக் காணவில்லை என்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தக் கடற்பகுதியில் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் மீட்புப் பணி சவாலாக உள்ளது. ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிழைப்புத் தேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். அவர்களில பலர் கிரீஸ் நாட்டையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டுக்கு, ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் மைகோனோஸ் தீவில் கடந்த ஜூன் மாதம் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்து 108 பேர் மீட்கப்பட்டதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.

Latest news

11 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் பண விகிதம் 4% ஐத் தாண்டியது

11 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் 04 சதவீதத்தை தாண்டியுள்ளது.

விக்டோரியாவில் ஆரம்பநிலைக்கு கார் பதிவு இலவசம்

விக்டோரியா மாகாணத்தில் தொழிற்பயிற்சி படிக்கும் பயிற்சியாளர்களுக்கு அவர்களின் கார்களை இலவசமாக பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை விக்டோரியா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மாரிசன் காலத்தில் பல சுகாதாரத் திட்டங்களில் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது

ஸ்காட் மொரிசனின் ஆட்சிக் காலத்தில் சுகாதாரம் மற்றும் வைத்தியசாலைத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கணக்காய்வு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் TikTok பயன்பாடு குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை

ஆஸ்திரேலியாவில் TikTok பயனர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 30 சதவீதம்...

ஆஸ்திரேலியாவில் TikTok பயன்பாடு குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை

ஆஸ்திரேலியாவில் TikTok பயனர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 30 சதவீதம்...

37 ஆண்டு சாதனையை முறியடித்த பெர்த் மழை

37 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் ஒரு நாளில் பெர்த்தில் பெய்த கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.