Newsஇத்தாலி நோக்கி சென்ற நிலையில் கடலில் மூழ்கிய அகதிகள் படகு -...

இத்தாலி நோக்கி சென்ற நிலையில் கடலில் மூழ்கிய அகதிகள் படகு – 50 பேர் மாயம்

-

துருக்கியிலிருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகொன்று கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது.

ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவுப் பகுதியில் படகு மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

படகில் சுமார் 80 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டதாகவும், 50 பேரைக் காணவில்லை என்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தக் கடற்பகுதியில் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் மீட்புப் பணி சவாலாக உள்ளது. ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிழைப்புத் தேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். அவர்களில பலர் கிரீஸ் நாட்டையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டுக்கு, ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் மைகோனோஸ் தீவில் கடந்த ஜூன் மாதம் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்து 108 பேர் மீட்கப்பட்டதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.

Latest news

வார இறுதியில் விக்டோரியாவில் பனிப்புயல் ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ஒரு பெரிய பனிப்புயல் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த குளிர்காலத்தில் ஏற்படும் மிகப்பெரிய பனிப்புயலாக இது...

ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு

ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ஒரு வருடத்தில் அதன் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. ஒரு மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 1.9% இலிருந்து 2.8% ஆக...

கிழக்கு கடற்கரையிலிருந்து ஐரோப்பாவிற்கு விரைவில் விமானங்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிறுவனமான Qantas, நிகர லாபத்தில் 28% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிகர லாபம் $2.4 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும், நிறுவனத்தின் வருவாய்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சமீபத்திய அமைப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஸ்வீடன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல...