நிதி மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பிடம் விசாரணை

0
188

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், அந்த நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபரும் ஆவார். ரியல் எஸ்டேட், நட்சத்திர ஓட்டல் என எண்ணற்ற தொழில்களை டிரம்ப் செய்து வருகிறார். இந்த சூழலில் டிரம்பின் நிறுவனம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டிரம்ப், அவரது நிறுவனம் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது நியூயார்க் மாகாண நீதித்துறை வழக்கு பதிவு செய்து நீண்டகாலமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக முதல் முறையாக டிரம்ப் நேற்று நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் பல மணி நேரம் விசாரணை நடத்தினார். முன்னதாக, டிரம்ப் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது அரசு தொடர்பான ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் புளோரிடாவில் உள்ள அவரது கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.