பாகுபலி பட காட்சியை மகனுடன் மறு உருவாக்கம் செய்த காஜல் அகர்வால்

0
39

நடிகை காஜல் அகர்வால், தற்போது தாய்மையை அனுபவித்து வருகிறார். குழந்தை நீலுடன் நேரம் செலவிட்டு வரும் அவர், அவ்வப்போது குழந்தையின் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துக் கொள்கிறார். தற்போது அவர் குழந்தை நீலுடன் பாகுபலி படத்தின் காட்சியை ரீ கிரியேட் செய்திருக்கிறார். காஜல் அகர்வால் – கௌதம் கிட்ச்லு தம்பதி இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீலை பெற்றெடுத்தனர். இதையடுத்து சில தினங்கள் முன்பு இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் படம் ஒன்றை வைத்திருந்தார். பாகுபலி படத்தில் சிவகாமி நெற்றியில் பாகுபலி பாதத்தை வைப்பதைப் போல, காஜல் அகர்வாலின் நெற்றியில் கால் வைத்திருந்தான் நீல்.

அந்தப் படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால், “எஸ்.எஸ்.ராஜமெளலி சார், உங்களுக்கு நீல் மற்றும் எனது அர்ப்பணிப்பு” எனக் குறிப்பிட்டு, பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா ஆகியோருக்கு அதை டேக் செய்திருந்தார்.காஜல் அகர்வால் மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் மகதீரா (2009) படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ராம் சரண் முக்கிய வேடத்தில் நடித்த இந்தப் படம் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கவுள்ளார் காஜல் அகர்வால். அதோடு கருங்காப்பியம், கோஸ்டி மற்றும் உமா ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார் காஜல்.