நீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள்.. இங்கிலாந்து மக்களுக்கு வந்த சோதனை

0
260

இங்கிலாந்தில் கோடைகாலத்தின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தென் மேற்கு, தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தின் ஒரு சில பகுதிகள் மற்றும் கிழக்கு இங்கிலாந்து முழுவதுமாக வறட்சி அறிவிக்கப்பட்டு உள்ளது. வறட்சி பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் நீத்தேக்கங்களில் வழக்கத்தை விடவும் நீரின் அளவு குறைந்து கானப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுகளின் நீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அதிகபட்சமாக நேற்று ஒருசில பகுதிகளில் 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திங்கட்கிழமை லண்டனை தவிற பிற பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்ற வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த மழை வெப்பம் மற்றும் வறட்சியை ஓரளவு போக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்து உள்ளது.

Previous articleAustralian Red Cross Blood Donation Camp
Next articleஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா