ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா

0
126

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் விரைவில் கலந்து கொள்கிறார். ஆனால் படத்தின் நாயகி யார் என்பது குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகை தமன்னா ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.நடிகை தமன்னா தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஆனால் இதுவரை ரஜினிகாந்த் படத்தில் நடித்ததில்லை. இந்த நிலையில் முதல் முறையாக ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் ரஜினி படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் தமன்னா.இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் ரஜினிகாந்த் உடன் முதல் கட்ட படப்பிடிப்பில் இணைவார் எனவும் கூறப்படுகிறது.