Newsஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

-

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை போக்க, ஆண்டுதோறும் வழங்கப்படும் திறன்மிக்க புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையில் மேலும் 40,000 அதிகரிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதனால் தற்போது சராசரியாக 160,000 வீசாக்கள் வழங்கப்படுவது இனி 2 லட்சமாக உயரும் என குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான யோசனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொவிட் நிலைமை காரணமாக 02 வருடங்களாக எல்லை மூடப்பட்டுள்ளமையினால், ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாட்டிலிருந்து வராத காரணத்தினால் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் அறிக்கையின்படி, தற்போது நாட்டில் பல்வேறு துறைகளில் சுமார் 480,100 வெற்றிடங்கள் உள்ளன.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வெற்றிடங்களின் வீதம் 111 சதவீதம் அதிகமாகும்.

ஊழியர் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக, 66 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களை 06 மாத காலத்திற்கு மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் குழந்தைகளை குழந்தை பராமரிப்புக்கு அனுப்புவதன் மூலம் தாய்மார்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அதிக சலுகைகளை வழங்குவது மற்றொரு யோசனையாகும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...