இலங்கையில் 6 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி 6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது. உலக தமிழர் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழர் பேரவை (CTC), அவுஸ்ரேலியத் தமிழர் பேரவை (ATC), தமிழீழ மக்கள் பேரவை (TEPA) மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)ஆகியவற்றின் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிவித்துள்ளது. இதேவேளை பிரித்தானியாவை தலமாக கொண்டு இயங்கும் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் 316 நபர்கள் மீதான தடையையும் நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.