Newsசீன கப்பல் விவகாரம்?

சீன கப்பல் விவகாரம்?

-

சீனாவின் யுவான் வாங் -5 கப்பல், நாளைய தினம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. இந்தியாவின் கரிசனைகளை தொடர்ந்தே, குறித்த கப்பல், இந்திய சுதந்திரதினத்திற்கு பின்பாக வரவுள்ளது. இதனை இந்தியாவினால் தடுத்து நிறுத்த முடியவில்லை – ஏனென்றால், இந்தியாவிற்கு முதுகெலும்பில்லை என்றவாறான, தமிழ் குரல்களை காண முடிகின்றது. சர்வதேச அரசியல் விவகாரங்களில் முதுகெலும்மை தேடும் அரசியல் (நமது) ஆய்வாளர்கள் என்போரின் பரிதாப நிலையை என்னவென்பது?

முதுகெலும்பு என்னும் கதையாடல்கள் சாதாரண பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். ராஜதந்திர விடயங்களில் முதுகெலும்பு என்று ஒன்றில்லை. தந்திரம் மட்டுமே அங்குண்டு. அண்மையில் அமெரிக்க சபாநாயகர், திட்டமிட்டவாறு, தாய்வானுக்கு சென்று, அங்கு சந்திப்புக்களில் ஈடுபட்டார். தாய்வானை தன்னுடைய பகுதியென்று சத்தமிட்டுவரும் சீனாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியானால் சீனாவிற்கு முதுகெலும்பில்லை எனலாமா? மற்றவர்களின் முதுகெலும்மை தேடுவதைவிட்டுவிட்டு, நமது பிரச்சினைகளை எவ்வாறு கையாளலாம் – ஏன் தொடர்ந்தும் தமிழர்களுக்கு தோல்வி மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கின்றது, என்று சிந்திப்பதுதான் நமது வேலையாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் தலையீட்டை தொடர்ந்துதான் குறித்த கப்பல் குறித்த திகதியில் துறைமுகத்திற்கு வரவில்லை. கடந்த 11ம் திகதி இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை பிற்போடுமாறு, கொழுப்பு, சீனாவை அறிவுறுத்தியிருந்தது. குறித்த கப்பலுக்கு முன் கூட்டியே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இதனை தடுப்பது கொழும்பிற்கு முடியாத காரியமாகிவிட்டது. ஆனாலும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே தற்போது திகதி பிற்போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையுணர்வின் அடிப்படையில் புதுடில்லி சில விடயங்களை வலியுறுத்துவதும், தேவைப்பட்டால் தலையீடு செய்வதும் சாதாரணமானது. ஆனால் தலையிடுவதற்கான எல்லைக் கோடானது, நமது சில தமிழர்கள் எதிர்பார்ப்பது போன்று இருக்காது. ஏனெனில் இது யுத்தமல்ல. ஒரு அமைதியான சூழலில் இடம்பெறும் இது போன்ற விடயங்களை ராஜதந்திர ரீதியில்தான் அணுக முடியும். மேலும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களை பொறுத்தவரையில், அவர்கள் அதிகம் இந்தியாவிற்கும் இலங்கைத் தீவுக்குமான புவியியல்-அருகாமை (Geographic proximity) தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

பாரியளவில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமாக இருந்தால், எவ்வேளையிலும் இலங்கைத் தீவை தங்களின் இராணுவ வளையத்திற்குள் கொண்டுவரமுடியும் – என்னும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாகவே அதிகம் பதட்டமடையாமல் இருக்கின்றனர். நான் ஒரு முறை, இந்திய கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற கொமடோர் வாசனை நேர்காணல் செய்திருந்தேன்.

அவர் கூறியது, இராணுவ நிலையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக் கூடிய நிலையிலேயே இந்தியா இருக்கின்றது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா அனுபவிக்கின்ற பூகோள அமைவிட அனுகூலங்களே இதற்கான காரணமாகும். இந்திய ஆயுதக்களஞ்சியத்தில் இருக்கின்ற சகல ஏவுகணைகளும் தாக்கக் கூடிய தொலைவிலேயே அம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கின்றது. இந்த நேர்காணலை எமது சிந்தனைக் கூட தளத்தில் நீங்கள் காணலாம்.

Latest news

Sussan Ley-இன் தலைமைத்துவம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை – லிபரல் துணைத் தலைவர்

கூட்டணியில் ஏற்பட்ட சமீபத்திய பிளவைத் தொடர்ந்து லிபரல் தலைவர் Sussan Ley-இன் தலைமை குறித்து வதந்திகள் பரவி வந்த போதிலும், லிபரல் துணைத் தலைவர் Ted...

உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் சாதனை அளவை எட்டிய தங்கத்தின் விலை

உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...

வெளிநாட்டுப் பெண்ணின் மரணத்திற்கு Dingos தான் காரணம்

கடந்த திங்கட்கிழமை K’gari-இல் இறந்த இளம் கனேடிய சுற்றுலாப் பயணியின் மரணம் Dingo தாக்குதலால் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 வயதான Piper James-இன் உடல், K’gari-இல்...

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

இரண்டாவது முறையாக தென்பட்ட சுறா மீன்கள் – மீண்டும் மூடப்பட்ட சிட்னி கடற்கரை

ஆஸ்திரேலியா தினத்தன்று சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் உள்ள பல பிரபலமான கடற்கரைகளில் சுறாக்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை 11.25 மணியளவில் Manly கடற்கரையில்...