Newsசீன கப்பல் விவகாரம்?

சீன கப்பல் விவகாரம்?

-

சீனாவின் யுவான் வாங் -5 கப்பல், நாளைய தினம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. இந்தியாவின் கரிசனைகளை தொடர்ந்தே, குறித்த கப்பல், இந்திய சுதந்திரதினத்திற்கு பின்பாக வரவுள்ளது. இதனை இந்தியாவினால் தடுத்து நிறுத்த முடியவில்லை – ஏனென்றால், இந்தியாவிற்கு முதுகெலும்பில்லை என்றவாறான, தமிழ் குரல்களை காண முடிகின்றது. சர்வதேச அரசியல் விவகாரங்களில் முதுகெலும்மை தேடும் அரசியல் (நமது) ஆய்வாளர்கள் என்போரின் பரிதாப நிலையை என்னவென்பது?

முதுகெலும்பு என்னும் கதையாடல்கள் சாதாரண பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். ராஜதந்திர விடயங்களில் முதுகெலும்பு என்று ஒன்றில்லை. தந்திரம் மட்டுமே அங்குண்டு. அண்மையில் அமெரிக்க சபாநாயகர், திட்டமிட்டவாறு, தாய்வானுக்கு சென்று, அங்கு சந்திப்புக்களில் ஈடுபட்டார். தாய்வானை தன்னுடைய பகுதியென்று சத்தமிட்டுவரும் சீனாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியானால் சீனாவிற்கு முதுகெலும்பில்லை எனலாமா? மற்றவர்களின் முதுகெலும்மை தேடுவதைவிட்டுவிட்டு, நமது பிரச்சினைகளை எவ்வாறு கையாளலாம் – ஏன் தொடர்ந்தும் தமிழர்களுக்கு தோல்வி மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கின்றது, என்று சிந்திப்பதுதான் நமது வேலையாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் தலையீட்டை தொடர்ந்துதான் குறித்த கப்பல் குறித்த திகதியில் துறைமுகத்திற்கு வரவில்லை. கடந்த 11ம் திகதி இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை பிற்போடுமாறு, கொழுப்பு, சீனாவை அறிவுறுத்தியிருந்தது. குறித்த கப்பலுக்கு முன் கூட்டியே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இதனை தடுப்பது கொழும்பிற்கு முடியாத காரியமாகிவிட்டது. ஆனாலும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே தற்போது திகதி பிற்போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையுணர்வின் அடிப்படையில் புதுடில்லி சில விடயங்களை வலியுறுத்துவதும், தேவைப்பட்டால் தலையீடு செய்வதும் சாதாரணமானது. ஆனால் தலையிடுவதற்கான எல்லைக் கோடானது, நமது சில தமிழர்கள் எதிர்பார்ப்பது போன்று இருக்காது. ஏனெனில் இது யுத்தமல்ல. ஒரு அமைதியான சூழலில் இடம்பெறும் இது போன்ற விடயங்களை ராஜதந்திர ரீதியில்தான் அணுக முடியும். மேலும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களை பொறுத்தவரையில், அவர்கள் அதிகம் இந்தியாவிற்கும் இலங்கைத் தீவுக்குமான புவியியல்-அருகாமை (Geographic proximity) தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

பாரியளவில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமாக இருந்தால், எவ்வேளையிலும் இலங்கைத் தீவை தங்களின் இராணுவ வளையத்திற்குள் கொண்டுவரமுடியும் – என்னும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாகவே அதிகம் பதட்டமடையாமல் இருக்கின்றனர். நான் ஒரு முறை, இந்திய கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற கொமடோர் வாசனை நேர்காணல் செய்திருந்தேன்.

அவர் கூறியது, இராணுவ நிலையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக் கூடிய நிலையிலேயே இந்தியா இருக்கின்றது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா அனுபவிக்கின்ற பூகோள அமைவிட அனுகூலங்களே இதற்கான காரணமாகும். இந்திய ஆயுதக்களஞ்சியத்தில் இருக்கின்ற சகல ஏவுகணைகளும் தாக்கக் கூடிய தொலைவிலேயே அம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கின்றது. இந்த நேர்காணலை எமது சிந்தனைக் கூட தளத்தில் நீங்கள் காணலாம்.

Latest news

ஆஸ்திரேலியாவில் படிப்படியாக குறையும் மின் கட்டணம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் மின் கட்டணம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஆஸ்திரேலிய எரிசக்தி சந்தையின் சமீபத்திய அறிக்கை...

ஆஸ்திரேலியாவில் பேசப்படும் முதல் 5 மொழிகள் இதோ!

ஆங்கிலம் தவிர, ஆஸ்திரேலியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மற்ற முதல் 5 வெளிநாட்டு மொழிகள் பெயரிடப்பட்டுள்ளன. அதன்படி, ஆங்கிலம் தவிர, ஆஸ்திரேலியர்களிடையே மாண்டரின் மிகவும் பொதுவான மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில்...

வெளி நாடுகளில் பிறந்த ஆஸ்திரேலியர்கள் பற்றிய புதிய தகவல்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் 30.7 சதவீதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் பிறந்த...

Anzac தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் ஆயிரக்கணக்கானோர்

அன்சாக் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் நகரங்களில் உள்ள போர் நினைவுச் சின்னங்கள் மற்றும் கல்லறைகளுக்கு சூரிய உதயத்திற்கு முன் குவிந்தனர். மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற...

கிரிக்கெட்டுக்கும் வரும் ஓட்டத்தில் சிறந்து விளங்கிய உசைன் போல்ட்

ஜூன் 1ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கோப்பைக்கான தூதராக ஒலிம்பிக் ஓட்டப் சாம்பியன் உசைன் போல்ட்டை சர்வதேச...