Breaking News ஸ்கொட் மோரிசனின் இரகசியங்கள் அம்பலம் - அதிர்ச்சியில் பிரதமர்

ஸ்கொட் மோரிசனின் இரகசியங்கள் அம்பலம் – அதிர்ச்சியில் பிரதமர்

-

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மோரிசன் (Scott Morrison) இரகசியமான முறையில் தன்னைப் பல அமைச்சர்நிலைப் பதவிகளுக்கு நியமனம் செய்துகொண்டமை தெரியவந்துள்ளது.

இது குறித்துத் தற்போதைய பிரதமர் ஆண்டனி ஆல்பனீசி (Anthony Albanese) அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஆண்டு மே மாதம் வரை, மோரிசன் கூடுதலாக 5 பதவிகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

COVID-19 நோய்ப்பரவல் உச்சத்தில் இருந்தபோது அவர் சுகாதார அமைச்சை வழிநடத்தியிருந்தார்.

அண்மையில் மோரிசன் தொழில்துறை, அறிவியல், எரிசக்தி, வளங்கள் ஆகியவற்றின் அமைச்சுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

அதன் தொடர்பில் அடுத்த திங்கட்கிழமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து ஆலோசனை பெறவிருப்பதாக ஆல்பனீசி கூறினார்.

அரசியல்வாதிகள் தங்களது செயல்களுக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆனால் எந்தச் சீர்திருத்தங்களையும் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலப் பிரதமர்கள் ஏற்கும் புதிய பதவிகளை வெளிப்படையாக அறிவிப்பதை உறுதிசெய்வதும் அவசியம் என ஆல்பனீசி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மோரிசன் தன்னைத் தற்காத்துப் பேசியிருக்கிறார். தனது பொறுப்புகளை அம்பலப்படுத்துவது அவசியமில்லை என்று கருதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

தளபதி 68-வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள்...

15 ஆண்டுகளில் மிகக் குறைவாக பதிவாகியுள்ள வீட்டு சேமிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள...

விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் விலை பற்றிய எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நீண்ட வார இறுதியில் வரவுள்ள...