
மகன்கள் லிங்கா, யாத்ராவை தியேட்டரிலேயே விட்டு விட்டு நடிகையுடன் தனுஷ் ஓட்டம் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. இதன் சுவாரசிய பின்னணியை இந்தபதிவில் பார்க்கலாம்.கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்கில் இன்று வெளியானது. இடையே உருவான ஜகமே தந்திரம், மாறன், அந்த்ராங்கி ரே, தி கிரே மேன் படங்கள் ஓ.டி.டி.யில் வெளிவந்தன.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷ் படம் தியேட்டரில் வெளியாகியிப்பதால் ரசிகர்கள் இதனை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். படமும் பாசிடிவான விமர்சனங்களைப் பெற்று வருவதால், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள்.இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னை ரோகினி தியேட்டரில் தனுஷ் ரசிகர்களுடன் இன்று காலை பார்த்தார். அவருடன் இசையமைப்பாளர் அனிருத், ஹீரோயின் ராஷி கன்னா, மகன்கள் லிங்கா, யாத்ரா உள்ளிட்டோரும் படத்தை பார்த்து ரசித்தனர்.
ரோகினி தியேட்டருக்கு தனுஷ் வந்திருக்கிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் தியேட்டரை சூழ்ந்து கொண்டனர். இதனை அறிந்த தனுஷ் பத்திரமாக வெளியேற வேண்டும் என்பதற்காக படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அரங்கை விட்டு வெளியே வந்ததாக கூறப்படுகிறது.அப்போது, கூட்டம் அதிகமாக இருந்ததால், நடிகை ராஷி கன்னாவின் கையைப் பிடித்துக் கொண்டே விறுவிறுவென படிக்கட்டுகளில் இறங்கி தனது காருக்குள் சென்றார். தனுஷ் தனது காரை அடைவதற்கு பவுன்சர்கள் உதவியாக இருந்தனர்.
முன்னதாக ரசிகர்கள் தனுஷையும், ராஷி கன்னாவையும் சூழ்ந்து கொண்டனர். ராஷியின் கையை இறுகப் பிடித்தவாறு, ரசிகர்களிடம் சிக்காமல் தனுஷ் அவரை பத்திரமாக காருக்குள் கொண்டு வந்தார்.காருக்குள் வந்த பின்னர்தான் மகன்களும் அனிருத்தும் தியேட்டரில் சிக்கியிருப்பதை தனுஷ் உணர்ந்தார். பின்னர் அவர்களும் பவுன்சர்களின் உதவியோடு பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர்.திருச்சிற்றம்பலம் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி பாசிடிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.