Newsஇலங்கையில் காதலியை கண்காணிக்க இளைஞனின் அதிர்ச்சி செயல்

இலங்கையில் காதலியை கண்காணிக்க இளைஞனின் அதிர்ச்சி செயல்

-

இலங்கையில் முஸ்​லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு சுற்றி திரிந்து கொண்டிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி ரயில் நிலையத்தில் இவ்வாறு அலைந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் பிடித்து, காலி பொலிஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காலி மக்ளுவவை வசிப்பிடமாகக் கொண்ட 27 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை ரயில் நிலையத்துக்கு வந்திருந்த அவ்விளைஞன், கொழும்புக்குச் செல்வதற்காக ரயில் பற்றுச்சீட்டை பெற்றுள்ளார்.

அவரது குரல் தொடர்பில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை பின்தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.

எனினும், முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையுடன் அலைந்து திரிபவர் ஆண்ணொருவர் என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் இனங்கண்டு கொண்டனர். அதன்பின்னர் அவரை பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

தன்னுடைய காதலி இன்னுமொருவருடன் தொடர்பில் இருக்கிறார் என கேள்விப்பட்டேன். அவ்விருவரும் காலி ரயில் நிலையத்துக்கு வருகின்றனர் என்றும் தகவல் கிடைத்தது. அதன்பின்னரே, இவ்வாறு முகத்தை மறைத்துக்கொண்டு, பெண்களின் உடையில் இங்கு வந்தேன் என தெரிவித்துள்ளார்.

அந்த அபாயா உடையானது, அவ்விளைஞனின் தாயுடையது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவ்விளைஞனை ரயில் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ​மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

ஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

Jane Birkin-இன் அசல் Hermès பை ஏலத்தில் $15.29 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த Sotheby-இன் ஏலத்தில் ஒன்பது ஏலதாரர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் போட்டியிட்டனர். ஜப்பானைச் சேர்ந்த...

Crypto ATM மோசடியில் $2.5 மில்லியன் இழப்பு

முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட Crypto ATM மோசடியில் 15 பேர் 2.5 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கிய ஒருவர் Crypto ATM-இல் இருந்து...

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக ஆஸ்திரேலியரை நியமித்த டிரம்ப்

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராட புறாக்களை கொல்ல வேண்டும் என்று அழைப்பு...