மதுபோதையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமர்

0
476

பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் மதுபோதையில் தனது நண்பர்களுடன் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியானதால், அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பின்லாந்தின் ஆளும் SOCIAL DEMOCRATIC கட்சியின் பிரதமராக சன்னா மரீன் பதவி வகித்து வருகிறார். உலகின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையுள்ள இவர், தனது அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் மது விருந்தில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

ஒரு நாட்டின் பிரதமர் பொறுப்பின்றி இருப்பதாக சன்னா மரீனாவுக்கு கண்டனமும் விமர்சனமும் குவிந்து வருகிறது. இந்நிலையில் பார்ட்டியில் மதுவை தவிர வேறு போதை பொருட்களை பயன்படுத்தவில்லை எனவும், நடனமாடியது, பார்ட்டி செய்தது எல்லாம் சட்டப்படியான விஷயங்கள் என்றும் சன்னா மரீன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், இவர் போதைமருந்து பரிசோதனை எடுக்க வேண்டும் என அந்நாட்டின் தலைவர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர். பிரதமர் சன்னா மரீன் சர்ச்சையில் சிக்குவது முதல் முறை அல்ல.கடந்தாண்டு கோவிட்-19 கட்டுப்பாடுகள் இருந்த காலத்தில் நைட் கிளப் சென்று பார்ட்டியில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார் சன்னா மாரின். கடந்த டிசம்பர் மாதம் இரவில் கிளப்பில் பார்ட்டிக்கு சென்று விடிய விடிய பார்ட்டி செய்தார் மாரின்.

அந்த நேரத்தில் அவர் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த விவரத்தையும் மறைத்தது சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். 2019ஆம் ஆண்டில் நாட்டின் இளம் பிரதமரான இவர் நண்பர்களுடன் பொழுதை கழித்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Previous articleபொன்னியின் செல்வன் படத்திலிருந்து ‘சோழா சோழா’ பாடல் வெளியீடு
Next article‘மக்களே தயவு செஞ்சு குடிங்க’.. கோரிக்கை வைக்கும் ஜப்பான் அரசு