பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ‘சோழா சோழா’ பாடல் வெளியீடு

0
187

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் தயாரிப்பு நிறுவனம் லைகா இறங்கியுள்ளது.அதில் முதல் கட்டமாக படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, அடுத்ததாக ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான பொன்னி நதி பாடலை வெளியிட்டனர்.

அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் இரண்டாவது பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். கரிகாலச் சோழனை மையமாகக் கொண்டு அந்தப் பாடல் சோழா சோழா என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.இதை முதல் பாடலை எழுதிய இளங்கோ கிருஷ்ணனே எழுதியுள்ளார். அதேபோல் சத்ய பிரகாஷ், VM மகாலிங்கம், நகுல் அபியங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.இந்தப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொன்னி நதி பாடலைப் போலவே, சோழா சோழா பாடலும் நன்றாக உள்ளதென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில் இடம்பெறும் காட்சிகள் பிரமிக்கும் வகையில் அமைந்துள்ளன.ஆதித்த கரிகாலனின் ஒட்டுமொத்த கேரக்டரையும் சோழா சோழா பாடல் உள்ளடக்கியிருப்பதாக பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தவர்கள் பாராட்டியுள்ளனர்.