இலங்கை தலைநகர் கொழும்புவில் மாணவர்கள் போராட்டம்

0
358

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு தப்பி சென்றார். இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 21-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு அமைந்தாலும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் அடக்குமுறையை நிறுத்துவதுடன் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய்யக்கோரியும் மாணவர்கள் சங்கத்தினரால் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் “டீல் ரணில் – ராஜபக்சே அரசை விரட்டியடிப்போம்” என பாதகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் போராட்டத்தை கலைத்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. மேலும் போராட்ட ஏற்பாட்டாளர் வசந்தம் முதலிகே உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Previous articleஅமெரிக்க சுற்றுலா விசா பெற குறைந்தபட்சம் 2024 வரை காத்திருக்க வேண்டும்- என்ன காரணம்?
Next articleஅமெரிக்க கிரீன் கார்டுக்கு கோத்தபய ராஜபக்சே விண்ணப்பம்?