பலாலியில் உள்ள யாழ்ப்பாண அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கான வானூர்தி சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் தொடக்க வாரத்திற்கு இரண்டு தடவை பலாலிக்கு வானூர்திகளை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
75-90 ஆசனங்கள் உள்ள வானூர்தி என விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகள் வரும் பருவ காலமாக தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு வானூர்தி நிலையத்திற்கான அனைத்துலக வானூர்தி சேவைகள் ஜூலை 1 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என்று சிறிலங்கா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஒக்ரோபர் 17, 2019 அன்று, சென்னையில் இருந்து அலையன்ஸ் ஏர் வானூர்தி பலாலி வானூர்தி நிலையத்தில் தரையிறங்கிய முதல் வணிக அனைத்துலக வானூர்தி என்பது குறிப்பிடத்தக்கது என்று கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.