ஆஸ்திரேலியாவில் பல்வேறு காரணங்களால், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் நாட்களில் மீண்டும் உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிர்பார்ப்பு – விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் இதை பாதித்துள்ளது.
நாடு முழுவதும் உணவு பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தியில் சுமார் 170,000 வேலை வாய்ப்புகள் இருப்பதாக ஆஸ்திரேலிய தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு கூறுகிறது.
இந்த நிலைமைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த 12-24 மாதங்களில் கடுமையான உணவுப் பற்றாக்குறை அல்லது விலைவாசி உயர்வை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன்படி, பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சி போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் 30 முதல் 50 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.