Newsவிக்டோரியாவில் 10,000 மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

விக்டோரியாவில் 10,000 மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

-

விக்டோரியா மாநிலத்தில் செவிலியர்கள் மற்றும் midwifery பட்டப்படிப்பு படிக்கும் சுமார் 10,000 மாணவர்கள் இலவச கல்வி பெறும் வாய்ப்பு உள்ளது.

இது மாநில அரசால் அறிமுகப்படுத்தப்படும் 270 மில்லியன் டொலர் புதிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ளது.

இதனால், 17,000 செவிலியர்கள் மற்றும் midwifery பயிற்சி அளித்து சுகாதார அமைப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறுகையில், 2023-2024 கல்வியாண்டில், விக்டோரியாவில் உள்ள எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் செவிலியர் அல்லது midwifery படிப்புக்கு நுழையும் உள்ளூர் மாணவர்களுக்கு பாடநெறி கட்டணத்தை ஈடுகட்ட உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 05 வருடங்களில், ஒரு மாணவருக்கு 9,000 டொலர்கள் மற்றும் விக்டோரியா பொது சுகாதார சேவையில் பணிபுரிந்தால், 7,500 டொலர்களும் பெறுவார்கள்.

மேலும், விக்டோரியா மாநில அரசு முதுகலை படிப்பை படிக்கும் செவிலிய மாணவிக்கு 10,000 டொலர்கள் உதவித்தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

தாதியாக மாறுவதற்கு இதைவிட சிறந்த நேரம் இல்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...