திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், ஆஸ்திரேலிய மத்திய அரசு தலைமையிலான வேலைவாய்ப்பு மற்றும் திறன் உச்சி மாநாடு கான்பெரா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.
இதில் அனைத்து மாநில பிரதமர்களும் பங்கேற்க உள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் தேசிய திறன் வாரத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த வேலை வாய்ப்பு மாநாட்டில், திறமையான பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல விவகாரங்களில் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
ஆஸ்திரேலியாவின் வருடாந்த குடிவரவு ஒதுக்கீட்டை 160,000 இலிருந்து 200,000 ஆக உயர்த்துவதற்கான யோசனைகள் உள்ளன.
இன்றும் நாளையும் கன்பராவில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு மற்றும் திறன் மாநாட்டில் பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் திறமையான பணியாளர்கள் தேவைப்படுவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சமீபத்தில் கூறினார்.
திறன் தொழிலாளர் பிரச்சனையை தீர்க்க தற்போதைய மத்திய அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.