Newsஆஸ்திரேலியாவில் கோர விபத்து - இந்திய பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் கோர விபத்து – இந்திய பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு

-

ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற கார் விபத்தில் பஞ்சாப் பாடகர் நிர்வாயிர் சிங் உயிரிழந்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வடமேற்கே 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் நிர்வாயிர் சிங் என்பவர் சிக்கி உயிரிழந்து உள்ளார். இதுபற்றி இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு வெளியான அறிக்கையில், நிர்வாயிர் சிங் தவறான இடத்தில், தவறான நேரத்தில் வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார் என தெரிவித்துஉள்ளது.

9 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இசை தொழிலை சிங் தொடர்ந்து வந்துள்ளார். அவரது மை டர்ன் என்ற ஆல்பத்தில் இடம் பெற்ற தேரே பீனா என்ற பாடல் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்த பாடல்களில் ஒன்று.

இந்த விபத்தில் சிக்கிய 3-வது காரில் இருந்தவர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் இருந்து வல்லான் பகுதியை சேர்ந்த ஆண் மற்றும் சன்பர்ரி பகுதியை சேர்ந்த பெண் என இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். விபத்துக்கான காரணம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Latest news

ஜப்பானில் ஒரு தொழிற்சாலையில் நடந்த கத்திக்குத்தில் ஐந்து பேர் படுகாயம்

மத்திய ஜப்பானில் உள்ள ஒரு டயர் தொழிற்சாலையில் எட்டு பேர் கத்தியால் குத்தப்பட்டதாகவும், ஏழு பேர் எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய...

கிரேன் சரிந்து விழுந்ததில் 90 பேர் இடம்பெயர்வு

பலத்த காற்று காரணமாக கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சவுத்போர்ட்டில் உள்ள ஒரு கேரவன் பூங்காவில் 30 டன் எடையுள்ள கிரேன் சரிந்து விழுந்ததில் 90க்கும் மேற்பட்டோர்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துள்ள வெள்ள அபாயம்

குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடக்கு பிராந்தியத்தின் ஈரமான...

20 ஆண்டுகளுக்கு முன்பு 3 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த ஆஸ்திரேலியப் பெண்

இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிய மற்றும் சிக்கலான மூன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியாவின் முதல் பெண் லூசிண்டா...