Newsநித்தியானந்தாவிடம் இருந்து ரணிலுக்கு கடிதம்?

நித்தியானந்தாவிடம் இருந்து ரணிலுக்கு கடிதம்?

-

இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகின்றது.

எனினும் இந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக அடைக்கலம் தருமாறும் அவர் கோரியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவத்துக்கான அனைத்து செலவுகளையும் தாம் வாழ்ந்து வரும் சொர்க்கப்பூமியான கைலாசம் ஏற்றுக்கொள்ளும் என்றும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவை வினவியபோது, நித்தியானந்தாவிடம் இருந்து எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை. அத்துடன் இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் பதில் வழங்கப்பட்டது.

Latest news

விக்டோரியாவில் இளைஞர்களுக்கான Barista Coffee பாடநெறி

விக்டோரியாவில் உள்ள ஒரு பகுதி இளைஞர்கள் Baristaக்களாக மாறுவதற்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கத் தயாராகி வருகிறது. விக்டோரியாவின் Corangamite-இல் உள்ள மாணவர்கள் ஏப்ரல் பள்ளி விடுமுறை...

NSW இல் போராட்டக்காரர்களால் அந்தோணி அல்பானீஸுக்கு இடையூறு

நியூ சவுத் வேல்ஸில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மீது எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ​​போராட்டக்காரர்கள்...

வட்டி விகிதக் குறைப்புக்குத் தயாராகும் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி அடுத்த செவ்வாய்க்கிழமை புதிய வட்டி விகிதங்களை அறிவிக்க உள்ளது. ஆஸ்திரேலியர்கள் அடமானங்கள் உட்பட நிவாரணம் பெற அதிகளவில் ஆசைப்படுவதால், வட்டி விகிதக் குறைப்புக்குத்...

Werribee இடைத்தேர்தலில் தொழிற்கட்சி மீண்டும் வெற்றி 

சமீபத்தில் Werribeeயில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பலகா தொழிலாளர் கட்சி வெற்றி பெறும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தொழிலாளர் கட்சி வேட்பாளர் ஜான் லிஸ்டர் வெற்றியின்...

Werribee இடைத்தேர்தலில் தொழிற்கட்சி மீண்டும் வெற்றி 

சமீபத்தில் Werribeeயில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பலகா தொழிலாளர் கட்சி வெற்றி பெறும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தொழிலாளர் கட்சி வேட்பாளர் ஜான் லிஸ்டர் வெற்றியின்...

ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே சர்வதேச எல்லை நெருக்கடி

சர்வதேச வான்வெளி மற்றும் கடல் எல்லைகளில் சீனா பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்துகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை, தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய கண்காணிப்பு...