News நித்தியானந்தாவிடம் இருந்து ரணிலுக்கு கடிதம்?

நித்தியானந்தாவிடம் இருந்து ரணிலுக்கு கடிதம்?

-

இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகின்றது.

எனினும் இந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக அடைக்கலம் தருமாறும் அவர் கோரியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவத்துக்கான அனைத்து செலவுகளையும் தாம் வாழ்ந்து வரும் சொர்க்கப்பூமியான கைலாசம் ஏற்றுக்கொள்ளும் என்றும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவை வினவியபோது, நித்தியானந்தாவிடம் இருந்து எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை. அத்துடன் இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் பதில் வழங்கப்பட்டது.

Latest news

ஆஸ்திரேலியாவில் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடு!

ஆஸ்திரேலியாவில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு பொருந்தும் 05 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை முற்றாக நீக்குவதற்கு தேசிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஆஸ்திரேலிய மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – குறைவடையும் எரிவாயு விலை

ஆஸ்திரேலியாவில் எரிவாயு விலை குறைவதற்கான அறிகுறிகள் உள்ளன. ஆஸ்திரேலிய மத்திய அரசுக்கும் எரிவாயு...

இலங்கையில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை!

இலங்கையில் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒவ்வொரு 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் போதிய உணவை உட்கொள்வதில்லை...

நியூ சவுத் வேல்ஸில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை!

நியூ சவுத் வேல்ஸில் வெள்ள அபாய எச்சரிக்கை அமைப்பு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இது...

நியூ சவுத் வேல்ஸில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை!

நியூ சவுத் வேல்ஸில் வெள்ள அபாய எச்சரிக்கை அமைப்பு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இது...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்!

ஆஸ்திரேலியாவில் ஒகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய...