பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் ( Liz Truss) அறிவிக்கப்பட்டுள்ளார்.
டிரஸ் வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. மற்றொரு வேட்பாளரான முன்னைய நிதியமைச்சர் ரிஷி சுனாக் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரண்டு சதவீதம் மட்டுமே என தெரியவந்துள்ளது.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சுமார் 200,000 உறுப்பினர்களிடையே லிஸ் டிரஸுக்கு ஆதரவு அதிகம் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தன.
நாளை ஸ்காட்லந்தில் உள்ள பால்மோரல் அரண்மனைக்குச் சென்று பிரித்தானியாவின் எலிசபெத் அரசியாரைச் சந்தித்தபின் லிஸ் டிரஸ் புதிய பிரதமராகப் பதவியேற்பார்.