ஆஸ்திரேலியாவில் பாலர் பாடசாலைகளில் வேலை பார்ப்பவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
போதுமான சம்பளம் இல்லை, வேலையிட வசதி போதவில்லை என்பது அவர்களின் மனக்குறையாக உள்ளது.
ஆஸ்திரேலியாவில் குறைந்தது 1,000 பாலர் பாடசாலைகள் இன்று மூடப்பட்டன. பாலர் பாடசாலைகளில் வேலை பார்ப்பவர்கள் மேற்கொண்ட ஆகப்பெரிய வேலை நிறுத்தம் அது என்று தொழிற்சங்கம் கூறியது.
ஒவ்வொரு நகரிலும் பேரணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று அம்சங்களில் அரசாங்கம் உடனே கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
நல்ல சம்பளம் தருவதும், லாபத்தைவிடப் பாலர் பாடசாலைகளில் மாணவர்களின் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்பதும் முக்கியக் கோரிக்கையாகும்.
தற்போது ஆஸ்திரேலியாவின் பாலர் பாடசாலைகளில் வேலைக்குச் சேர்வோரின் ஆரம்பச் சம்பளம் மணிக்கு எதிர்பார்த்ததனை விடவும் குறைவாகவே உள்ளது.