Newsஆஸ்திரேலியா செல்ல முயன்ற 84 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 84 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

-

மட்டக்களப்பு செங்கலடி கடல்பகுதியில் இருந்து ஆஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலில் வைத்தும் இவர்களை கடற்கரையில் இருந்து இயந்திரப்படகிற்கு கொண்டு சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 பேர் உட்பட 89 பேரை மட்டக்களப்பு செங்கலடி கடல் பிரதேசத்திலும் நாவலடி கடற்கரையிலும் வைத்து கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கடைய சம்பவதினமான இன்று அதிகாலை மட்டக்களப்பு கடல்பரப்பில் கடற்பரைடயினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது மட்டு செங்கலடி கடல் பிரப்பில் இயந்திரப்படகு ஒன்று பிரயாணிப்பதை அவதானித்த கடற்படையினர் சுற்றிவளைத்து குறித்த படகை மறித்து சோதனையிட்டபோது அதில் சட்டவிரோதமாக ஆஸ்ரேலியாவுக்கு பிரயாணித்த 60 ஆண்கள், 13 பெண்கள், மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 84 பேரை கடலில் வைத்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, மடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை திருகோணமலை கடற்படை முகாமிற்கு கடற்படையினர் அழைத்துச் சென்று திருகோணமலை தலைமையக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலில் காத்திருந்த இயந்திரப்படகிற்கு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி கடற்கரையில் இருந்து 4 சிறிய இயந்திரப்படகுகளில் குடியேற்ற காரர்களை ஏற்றி கொண்டு சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பேரை நாவலடி கடற்கரையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் 4 படகுகள், 4 இயந்திரங்கள மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Latest news

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – Meta நிறுவனம் மீது விசாரணை

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், Meta நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை...

சர்ச்சைக்குரிய முழக்கத்தை தடை செய்ய தயாராகும் NSW

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, பொது இடங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் பயன்படுத்தப்படும் "Globalise the Intifada" என்ற முழக்கத்தைப் பயன்படுத்துவதைத்...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...

இனி தீபிகா படுகோனுக்கு பதிலாக சாய் பல்லவி

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த கல்கி திரைப்படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தின்...