ஆஸ்திரேலியாவில் அடுத்த சில மாதங்களில் கூடுதலான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்திருக்கும் வேளையில், அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
La Nina எனும் பருவநிலை நிகழ்வால், வசந்த காலத்தில் வழக்கமான அளவை விட ஆஸ்திரேலியாவில் கனத்த மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
அதன் தாக்கம், கோடைக்காலம் வரை நீடிக்கக்கூடும் என்று பருவநிலை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதி, கடுமையான புயலில் இருந்தும் வெள்ளத்தில் இருந்தும் இன்னும் மீண்டு வருகிறது.
இதற்கு முன்னர், சிட்னி நகரில் 30ஆண்டுகளில் கண்டிராத வண்ணம் கனத்த மழை பெய்திருந்தது. அப்போது ஆயிரக் கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இன்னொரு முறை வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுவதால், மக்கள் இப்போதே அதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் நெருக்கடிநிலைச் சேவைகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.