ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 30ஆம் திகதிக்குப் பிறகும் கோவிட் உதவித்தொகையை வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இது தேசிய அமைச்சரவையில் உள்ள அனைத்து மாநில பிரதமர்களாலும் அங்கீகரிக்கப்பட்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குறிப்பிட்டார்.
17 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு, தனிமையில் இருப்பது அல்லது கோவிட்19 தொற்றால் வேலை நேரத்தை இழக்கும் நபர்களுக்கு இதுவரை கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது.
வாரத்திற்கு குறைந்தபட்சம் 08 மணிநேர வேலை நேரத்தை இழந்தால் 450 டொலராகவும், 08 முதல் 20 மணிநேரம் வரை இழந்தால் 750 டொலராகவும் இருக்கும்.
30ம் திகதியுடன் முடிவடைய இருந்தது. தனிமைப்படுத்தல் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் இருப்பதால், உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டதாக பிரதமர் அல்பானீஸ் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த கொடுப்பனவு 06 மாத காலத்திற்குள் அதிகபட்சம் 03 சந்தர்ப்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என திருத்தப்பட்டுள்ளது.
இன்றுவரை செலுத்தப்பட்ட கொடுப்பனவுகளின் மொத்தத் தொகை 2.2 பில்லியன் டொலராகும்.