ஆஸ்திரேலியாவில் கடந்த ஜூன் காலாண்டில், சுமார் 900,000 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கு மத்தியில் மாதாந்த கட்டணங்களை செலுத்த பல வேலைகளைச் செய்வதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை என ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்களின் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜூன் காலாண்டில் 6.5% உழைக்கும் மக்கள் பல வேலைகளில் பணியாற்றியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதங்களை எதிர்கொண்டு, வீட்டுக் கடன்கள் மற்றும் அடமானங்களைச் செலுத்த கூடுதல் பணத்தைக் கண்டுபிடிப்பதும் பல வேலைகளில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணமாகிவிட்டது.
அடுத்த மார்ச் வரை பணவீக்கம் உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர்.