Newsஇலங்கையில் போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூற அனுமதி!

இலங்கையில் போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூற அனுமதி!

-

யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த திலீபனின் 35 ஆவது ஆண்டு நிவைவேந்தல் நிகழ்வு நேற்று ஆரம்பமானது.

நேற்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும்போது இன ரீதியான, மொழி ரீதியான, மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன எனவும் அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் கொடிகளைப் பயன்படுத்தியோ அல்லது அந்த அமைப்புக்களுக்கு புகழாரம் சூட்டியோ நினைவேந்தல் நிகழ்வுகளைக் கடைப்பிடிக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.அவற்றை மீறினால் சட்டங்களுக்கமைவாகவே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சிட்னி இசை விழாவில் ஒருவர் பலி – 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிட்னியின் Olympic Park-இல் நடைபெற்ற Dreamstate techno இசை விழாவில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் 40 வயதுடைய ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் இறந்தார். இந்த...

பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது படுக்கையறைக்குள் மோதிய கார் – ஒருவர் பலி

பெர்த்தின் உள்-கிழக்கில் ஒரு வீட்டின் மீது மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பாட்டி கொல்லப்பட்டார். 53 வயதான Himali Gurung தூங்கிக்...