ரஷ்யப் பயணிகளுக்குத் தடைவிதிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
உக்ரேனியப் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைவிதிக்கப்பட்டிருந்தாலும் ரஷ்யாவைச் சேர்ந்த பயணிகள் நாட்டுக்கு வருவதைத் தடுக்கமுடியாது என்று ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மைல்ஸ் (Richard Marles) கூறினார்.
பெப்ரவரி மாதம் போர் தொடங்கியபின் ரஷ்யா மீது ஆஸ்திரேலியா விரிவான தடைகளை விதித்திருக்கிறது.
நூற்றுக்கணக்கான தனிநபர்கள் மீதும் வங்கித்துறையின் பெரும்பகுதி, ரஷ்ய அரசாங்கத்தின் கடனுக்குப் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய தொலைக்காட்சிக்குப் பேட்டி தந்த அமைச்சர் ரிச்சர்ட் மைல்ஸ், ரஷ்யப் பயணிகளை அரசாங்கம் தடுக்குமா என்ற கேள்விக்குத் தடை அரசாங்கத்தின் மீதுதான் பொதுமக்கள் மீது அல்ல என்று கூறினார்.