Newsஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி

-

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியாவின் உதவியை வலியுறுத்தி நிற்கின்றோம்.”

  • இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய உறுப்பு நாடு மட்டுமல்லாது, அது நமது சக்திவாய்ந்த முக்கியமான அண்டை நாடாகவும், பிராந்திய வல்லரசாகவும் உள்ளது.

பல தசாப்தங்களாக ஈழ தமிழர் இனப்பிரச்சினையில் இந்தியா தீவிரமான அக்கறை கொண்டுள்ளதுடன், இலங்கை உட்பட உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட எமது அவல நிலையைப் பற்றிய சிறந்த அறிவையும் புரிதலையும் கொண்டுள்ளது.

தமிழராகிய நாம் துன்பங்களை எதிர்கொள்ளும்போது, முதலில் உதவிக்கு வருவது இந்தியா தான். உதாரணமாக, 1983 இல் தமிழர்கள் சிங்கள காடையர்களால் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டு, தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட போது, இலட்சக்கணக்கான தமிழர்கள் சிறிய படகுகளில் இந்தியாவுக்கே பாதுகாப்புக்காகத் தப்பிச் சென்றனர்.

இப்போதும் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகள் வாழ்கின்றனர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் உணவு, தங்குமிடம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பை தமிழ் அகதிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

இந்தியா பாதுகாப்பு வழங்கியது மட்டுமல்லாது, பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா, 1983இல் நியூயோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு எங்களின் பிரச்சினையை எடுத்துச் சென்று, தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நமது அவல நிலையை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றது.

ஐ.நாவில் எங்களுக்கு மீண்டும் இந்தியாவின் உதவி தேவைப்படுகின்றது. இது எங்களின் பாதுகாப்புடன் நேரடியாக சம்பந்தப்பட்டது.

இலங்கை ஆயுதத் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்காகவும், நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி நமக்குத் தேவை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமையும் அதிகாரமும் உள்ளது.

எமது பிராந்தியத்திலிருந்து தொலைதூரத்திலுள்ள எமது இனப்பிரச்சினை தொடர்பாக சரியான புரிதல் இல்லாத நாடுகளை விட, எமது பிராந்தியத்தின் தலைமை நாடாகிய, நமது அவலநிலையைப் பற்றி அதிக புரிதலையும் பொறுப்பையும் இந்தியா கொண்டுள்ளது.

நமது அண்டை நாடாக, ஐ.நா. மற்றும் பிற சர்வதேச மன்றங்களில் தலைமைப் பாத்திரத்தை வகிக்க இந்தியாவை நாம் வலியுறுத்துகிறோம். ” – என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவின் இளைய விமானி

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் விமானத்தில் உலகம் முழுவதும் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளான். குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த Byron Waller என்ற இளைஞர்,...

ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வரும் விக்டோரியாவின் கடன் சுமை

2024-25 நிதியாண்டில் விக்டோரியா அரசாங்கத்தின் நிகரக் கடன் ஒரு மணி நேரத்திற்கு $2 மில்லியன் அதிகரித்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. அதன்படி, ஒரு வருடத்தில் கடன்...

இன்று ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு

உக்ரெய்ன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் சுமார் 3 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்ற நிலையில், போரை நிறுத்துவதற்கு பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரெய்ன்...

Melbourne West Gate Freeway-இல் தீ விபத்து – நிலவிய கடும் போக்குவரத்து நெரிசல்

மெல்பேர்ண் விரைவுச்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட லாரி தீ விபத்து, பயணிகளுக்கு பெரும் தாமதத்தை ஏற்படுத்தியது. Port Melbourne-இல் உள்ள புறநகர்ப் பாதையான West Gate Freeway-இல்...

Melbourne West Gate Freeway-இல் தீ விபத்து – நிலவிய கடும் போக்குவரத்து நெரிசல்

மெல்பேர்ண் விரைவுச்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட லாரி தீ விபத்து, பயணிகளுக்கு பெரும் தாமதத்தை ஏற்படுத்தியது. Port Melbourne-இல் உள்ள புறநகர்ப் பாதையான West Gate Freeway-இல்...

எச்சரிக்கை..! உணவுப் பொருளில் கண்ணாடித் துண்டுகள்

ஜாடிகளில் கண்ணாடித் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, Coles, Woolworths மற்றும் IGA பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பிரபலமான ஊறுகாய் Jalapenos-இற்கு அவசரகால திரும்பப் பெறுதல் உத்தரவு...