Newsஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி

-

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியாவின் உதவியை வலியுறுத்தி நிற்கின்றோம்.”

  • இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய உறுப்பு நாடு மட்டுமல்லாது, அது நமது சக்திவாய்ந்த முக்கியமான அண்டை நாடாகவும், பிராந்திய வல்லரசாகவும் உள்ளது.

பல தசாப்தங்களாக ஈழ தமிழர் இனப்பிரச்சினையில் இந்தியா தீவிரமான அக்கறை கொண்டுள்ளதுடன், இலங்கை உட்பட உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட எமது அவல நிலையைப் பற்றிய சிறந்த அறிவையும் புரிதலையும் கொண்டுள்ளது.

தமிழராகிய நாம் துன்பங்களை எதிர்கொள்ளும்போது, முதலில் உதவிக்கு வருவது இந்தியா தான். உதாரணமாக, 1983 இல் தமிழர்கள் சிங்கள காடையர்களால் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டு, தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட போது, இலட்சக்கணக்கான தமிழர்கள் சிறிய படகுகளில் இந்தியாவுக்கே பாதுகாப்புக்காகத் தப்பிச் சென்றனர்.

இப்போதும் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகள் வாழ்கின்றனர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் உணவு, தங்குமிடம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பை தமிழ் அகதிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

இந்தியா பாதுகாப்பு வழங்கியது மட்டுமல்லாது, பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா, 1983இல் நியூயோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு எங்களின் பிரச்சினையை எடுத்துச் சென்று, தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நமது அவல நிலையை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றது.

ஐ.நாவில் எங்களுக்கு மீண்டும் இந்தியாவின் உதவி தேவைப்படுகின்றது. இது எங்களின் பாதுகாப்புடன் நேரடியாக சம்பந்தப்பட்டது.

இலங்கை ஆயுதத் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்காகவும், நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி நமக்குத் தேவை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமையும் அதிகாரமும் உள்ளது.

எமது பிராந்தியத்திலிருந்து தொலைதூரத்திலுள்ள எமது இனப்பிரச்சினை தொடர்பாக சரியான புரிதல் இல்லாத நாடுகளை விட, எமது பிராந்தியத்தின் தலைமை நாடாகிய, நமது அவலநிலையைப் பற்றி அதிக புரிதலையும் பொறுப்பையும் இந்தியா கொண்டுள்ளது.

நமது அண்டை நாடாக, ஐ.நா. மற்றும் பிற சர்வதேச மன்றங்களில் தலைமைப் பாத்திரத்தை வகிக்க இந்தியாவை நாம் வலியுறுத்துகிறோம். ” – என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்து மக்களுக்கு வானிலை எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பவழக்கடலில் நகர்ந்து செல்வதால்...

அவுஸ்திரேலியாவில் சத்திரசிகிச்சை செய்யப்போகின்றவர்களுக்கும் ஏற்படவுள்ள பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரம் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு அறுவை சிகிச்சைக்காக நோயாளி 21 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது...

தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் Passport

உலகிலேயே அதிக விலை கொண்ட கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் மெக்சிகோ முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மெக்ஸிகோ 162 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகிறது மற்றும் அதன்...

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேலின் எதிர் தாக்குதல்

ஈரானில் பல அணுமின் நிலையங்கள் உள்ள நகரம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் மூலம்...

தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் Passport

உலகிலேயே அதிக விலை கொண்ட கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் மெக்சிகோ முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மெக்ஸிகோ 162 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகிறது மற்றும் அதன்...

மெல்போர்ன் பெண்கள் பள்ளி மாணவிகள் குழுவிற்கு நிகழ்ந்த அநீதி

மெல்போர்னில் உள்ள பெண்கள் பள்ளி மாணவிகள் தோலின் நிறம் காரணமாக பள்ளி புகைப்படங்களில் இருந்து நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களின் தோல் நிறம் மற்றும் மதம் காரணமாக...