ஆஸ்திரேலியாவில் இணையப் பாதுகாப்பு தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிடுவதற்கு உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது சில நாட்களுக்கு முன்பு Optus சந்தித்த பாரிய சைபர் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டது.
புதிய விதிகளின்படி, எந்தவொரு முன்னணி நிறுவனமும் சைபர் தாக்குதலுக்கு ஆளானால், வங்கிகள் உட்பட பல நிறுவனங்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, வாடிக்கையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சட்டங்களின்படி, சைபர் தாக்குதல் குறித்து வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.