ஆஸ்திரேலிய கடவுச்சீட்டை நாடும் மக்கள் நீண்ட கால தாமதத்தை எதிர்கொள்வதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
புதிய செயற்பாடுகளை கொண்ட கடவுச்சீட்டு வழங்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “பி” வகைக்கு பதிலாக “ஆர்” பிரிவின் கீழ் புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் புகைப்படத்துடன் கூடிய பக்கம் புதிய பாதுகாப்பு முறைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கடவுச்சீட்டை வழங்கும் போது பல தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்வதும் கடவுச்சீட்டுகள் தாமதமாவதற்கு மற்றொரு காரணமாகும்.
கடந்த ஏப்ரலில் 160,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் அது 250,000 ஆக அதிகரித்துள்ளது.
எனினும் மாதாந்தம் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 05 இலட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.