Breaking Newsஇலங்கையின் பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

இலங்கையின் பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

-

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் 41 வயதில் காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், உயிரிழந்துள்ளார்

இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர், இறக்குவானை சென். ஜோன்ஸ் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். சிட்னி சந்திரசேகர என்பவரினால் 2008 ஆம் ஆண்டு இயக்கப்பட்ட சிங்கள சின்னத்திரை நாடகமான ‘ஏ9’ மூலம் தர்ஷன் தர்மராஜ் அறிமுகமானார்.

அவர் தமது சினிமா பயணத்தை அதே ஆண்டில் ‘பிரபாகரன்’ என்ற சிங்கள மொழித் திரைப்படத்தில் ஆரம்பித்தார். அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் நடித்திருந்தார்.

இலங்கை தமிழர்கள் மத்தியில் பிரபலமடைந்த சிங்கள திரைப்படங்களான ‘இனியவன்’, ‘சுனாமி’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இனியவன் படத்துக்காக விருதுகளையும் அவர் வென்றுள்ளார். அத்துடன், இலங்கையில் உருவான கோமாளி கிங்ஸ் என்ற பிரபல தமிழ் மொழி திரைப்படத்திலும் தர்ஷன் தர்மராஜ் நடித்துள்ளார். இறுதியாக அவர், ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், ‘ரெல்ல வெரல்லட் ஆதரே’ என்ற தொலைக்காட்சி தொடரில், ஜெயராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக தானியா ஜெயமோகன் வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம்

டானியா ஜெயமோகன் (Tania Jeyamohan) தனது வழக்கறிஞர் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். இது மேற்கு ஆஸ்திரேலியாவின் நீதித்துறையில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது....

தொலைபேசி வழியாக இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கும் புதிய சாதனம்

நீரிழிவு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் Continuous Glucose Monitor (CGM), நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களிடமும் பிரபலமாகிவிட்டது. இது தொலைபேசி வழியாக பெறப்பட்ட வரைபடம் மூலம் இரத்த...

டிரம்ப்-புடின் சந்திப்புக்கு என்ன ஆனது?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு உடன்பாடு இல்லாமல் முடிந்தது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் ஆர்வமாக இருப்பதாக புடின்...

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு – நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இப்போது அதிக தனிநபர் காய்ச்சல் விகிதத்தைக் கொண்டுள்ளனர். ஏனெனில் மாநிலம் முழுவதும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஆறு...