ஆஸ்திரேலியாவின் தற்போதைய குடிவரவு கொள்கையை மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில், உலகெங்கிலும் உள்ள தற்போதைய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.
இந்த விவகாரங்களின் நீண்டகால தாக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்று குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் கூறினார்.
பூர்வாங்க நடவடிக்கையாக வருடாந்த குடிவரவு ஒதுக்கீட்டை 160,000 இலிருந்து 195,000 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அகதிகளின் எதிர்காலம் இருள் சூழ்ந்துவிடாத வகையில், அகதிகள் பிரச்சினையை விரைவில் தீர்க்க தொழிற்கட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என குடிவரவு அமைச்சர் அன்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.