ஜப்பானில் இலங்கை தாதியர்களாக கடமையாற்ற 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
ஜப்பானிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று உத்தரவாதம் அளித்துள்ளது.
ஜப்பானுக்கு சென்றுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் குறித்த நிறுவனம் ஆயிரம் வேலைவாப்பிற்கான சான்றிதழை கையளித்து உத்தரவாதம் அளித்துள்ளது.
அத்துடன் இந்த வருட இறுதிக்குள் இலங்கையிலிருந்து 150 தாதியர்களை பணிக்கு அமர்த்துவதற்கும் ஜீ ரீ என் என்ற வெளிநாட்டு வேலைவாய்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
ஜப்பானில் தாதியர்களாக கடமையாற்றுவதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.