கடந்த மாதம் ஆஸ்திரேலியா முழுவதும் வீடுகளின் விலை 1.4 சதவீதம் குறைந்துள்ளதென தெரியவந்துள்ளது.
சமீபத்திய ஆய்வின்படி, 25 சதவீதம் அதிகரித்த வீடுகளின் விலை, இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மீண்டும் 5.5 சதவீதம் குறைந்துள்ளது.
சிட்னியில் வீட்டின் விலைகள் மிக உயர்ந்த மதிப்பில் குறைந்துள்ளது மற்றும் கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த குறைவு 104,300 டொலராகும்.
இரண்டாவது இடத்தில் உள்ள பிரிஸ்பேனில் வீடுகளின் விலைகள் சுமார் 4.3 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் நிறைவேற்று சபை நாளை மீண்டும் கூடவுள்ளதுடன், வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்த தீர்மானம் அங்கு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 25 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரொக்க விகிதம் 2.35 சதவீதமாக உள்ளது.