Newsஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி - மீண்டும் இணைய ஊடுருவல்- மில்லியன் கணக்கானோர் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி – மீண்டும் இணைய ஊடுருவல்- மில்லியன் கணக்கானோர் பாதிப்பு

-

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஓர் இணைய ஊடுருவல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத.

இதற்கு முன்னதாக அங்கு 2 வாரங்களுக்கு முன்பு Optus கட்டமைப்பில் இணைய ஊடுருவல் சம்பவம் இடம்பெற்றது.

இம்முறை ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Telstra இணைய ஊடுருவலால் பாதிப்புக்குள்ளானது.

அதில் பயனீட்டாளர்களின் தகவல்கள் ஏதும் களவாடப்படவில்லை. ஆனால் சுமார் 30,000 பயனீட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் dark web என்றழைக்கப்படும் இணையத்தின் ரகசியத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

Telstra நிறுவனத்துக்கு மொத்தம் 18.8 மில்லியன் பயனீட்டாளர்கள் உள்ளன. அந்த எண்ணிக்கை ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் சுமார் 75 விழுக்காடு.

இணையத் தாக்குதல்களின் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் நிதி அமைப்புகளும் அரசாங்கத் துறைகளும் எச்சரிக்கையாகச் செயல்படுகின்றன.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...