Newsநிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள்

நிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள்

-

ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் நிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவலட வெளியாகியுள்ளது.

அவர்கள் 2025ஆம் ஆண்டுக்குள் நிலவில் செடிகளை வளர்க்கத் திட்டமிடுகின்றனர். அந்தத் திட்டம் எதிர்காலத்தில் நிலவில் மனிதச் சமூகம் வாழ்வதற்கு வகைசெய்யும் என்று கூறப்படுகிறது.

குவீன்ஸ்லந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செடிகளுக்கான உயிரியல் ஆய்வாளரான பிரெட் வில்லியம்ஸ் (Brett WIlliams) திட்டத்தைப் பற்றி மேலும் விவரித்தார்.

Beresheet 2 எனும் தனியார் இஸ்ரேலிய உந்துகணை விதைகளை நிலவுக்குக் கொண்டுசெல்லும். நிலவுக்குச் சென்றபின் மூடிவைக்கப்பட்ட அறையில் விதைகளுக்கு நீர் அளிக்கப்படும். அவை செடிகளாக வளர்கின்றனவா என்பது கண்காணிக்கப்படும்.

சிறப்பாக வளரும் செடிகள் தேந்தெடுக்கப்படும். புதிய திட்டத்தில், ஆஸ்திரேலியாவில் நீரின்றி உயிர்வாழக்கூடிய “resurrection grass” என்ற செடி நிலவுக்கு அனுப்பப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மனித வாழ்வுக்குத் தேவையான உணவு, மருந்து, உயிர்வாயு போன்றவற்றைச் செடிகள் அளிக்கக்கூடியவை. மனிதர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான செடிகளை நிலவில் வளர்க்கப் புதியத் திட்டம் வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...