News இலங்கையர்களுக்கு தாமரைக் கோபுர உச்சியில் இருந்து குதிக்க வாய்ப்பு!

இலங்கையர்களுக்கு தாமரைக் கோபுர உச்சியில் இருந்து குதிக்க வாய்ப்பு!

-

லோடஸ் டவர் எனப்படும் தாமரைக் கோபுரத்தில் இருந்து ஸ்கை டைவிங் எனப்படும் அந்தரத்தில் பாய்ந்து விளையாடும் சாகச விளையாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் தாமரைக் கோபுர உச்சியில் இருந்து பங்கி ஜம்ப் எனப்படும் இரும்புக் கம்பி உதவியுடனான பாய்ச்சல் விளையாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கென சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் தாமரைக்கோபுர நிர்வாக மற்றும் பராமரிப்பு அதிகார சபை ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.

வருடமொன்றுக்கு குறைந்தது பத்தாயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அங்கு அழைத்து வந்து பங்கி ஜம்ப் விளையாட்டில் ஈடுபடுத்துவது குறித்த சிங்கப்பூர் நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்காக சுற்றுலாப் பயணியொருவரிடமிருந்து 600 டொலர்கள் கட்டணமாக அறவிடப்படவுள்ளது.

உள்நாட்டு சாகசப்பிரியர்களுக்கும் அதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளதுடன் அவர்களுக்கும் கணிசமான கட்டணமொன்று அறவிடப்படவுள்ளது.

அதே போன்று மிக விரைவில் தாமரைக் கோபுர உச்சியில் இருந்து பரசூட் பாய்ச்சல் சாகச விளையாட்டுக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக துருக்கிய நிறுவனமொன்றின் ஒத்தாசை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.