ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி நவம்பர் 26ம் திகதி நடைபெறும் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைக் கட்டணங்களையும் குறைப்பதாக உறுதியளிக்கிறது.
அதன்படி, ரயில்-பஸ் கட்டணம், டிராம்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 2 டொலர் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் வகையில் கட்டணங்கள் திருத்தப்படும்.
இருப்பினும், பெரும்பாலான பிராந்திய விக்டோரியாவை உள்ளடக்கிய V/Line சேவைகளுக்கான கட்டணக் குறைப்பு இருக்காது.
இதனால், 04 வருட காலத்திற்கு விக்டோரியா மாநில அரசாங்கத்திற்கு 1.3 பில்லியன் டொலர்கள் செலவாகும்.
எதிர்க்கட்சியின் முன்மொழிவின்படி, தற்போது ஒரு நாளைக்கு 9.20 டொலர் என்ற கட்டணம் ஒரு நாளைக்கு 2 டொலராக குறைக்கப்படும்.
வாழ்க்கைச் சுமையால் அவதிப்படும் விக்டோரியாவின் பயணிகளுக்கு நிவாரணம் வழங்குவதே இதன் நோக்கம் என விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் மேத்யூ கை தெரிவித்தார்.