Newsபிக்பாஸ் 6 - ஆரம்பிக்க முதலே தொடங்கப்பட்ட ஜனனி ஆர்மி

பிக்பாஸ் 6 – ஆரம்பிக்க முதலே தொடங்கப்பட்ட ஜனனி ஆர்மி

-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் நேற்று மாலை 6 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கியது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கடந்த 5 சீசனும் வெற்றிகரமாக ஒளிப்பரப்பான நிலையில், தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 6 வது சீசன் தொடங்கியுள்ளது.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த பின்னர் தான் அதில் உள்ள போட்டியாளர்களுக்கு சமூக வலைதளங்களில் ஆர்மி தொடங்கப்படும். ஆனால் இந்த முறை நிகழ்ச்சி தொடங்கும் போதே ஒரு போட்டியாளருக்கு ஆர்மியை தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது ஓவியா தான். ஏனெனில் இந்நிகழ்ச்சி மூலம் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஓவியா.

பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஓவியாவுக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு இணையான ரசிகர்கள் இருந்தனர்.

பிக்பாஸ் போட்டியாளர் ஒருவருக்கு முதலில் ட்விட்டரில் ஆர்மி தொடங்கப்பட்டது என்றால் அது ஓவியாவுக்கு தான். அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருந்தார் ஓவியா.

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துவிட்டாலும் ஓவியாவை மிஞ்சும் அளவுக்கு இதுவரை எந்த ஒரு பெண் போட்டியாளருக்கும் வரவேற்பு கிடைத்ததில்லை என்பதே உண்மை.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த பின்னர் தான் அதில் உள்ள போட்டியாளர்களுக்கு ட்விட்டரில் ஆர்மி தொடங்கப்படும். ஆனால் இந்த முறை நிகழ்ச்சி தொடங்கும் போதே ஒரு போட்டியாளருக்கு ஆர்மி தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த இவர், தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ளார். முன்னதாக இலங்கையை சேர்ந்த பெண் போட்டியாளரான லாஸ்லியா கடந்த 3-வது சீசனில் பங்கேற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

அவரைப் போல ஜனனியையும் தற்போதே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். அவரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...